Canada

ரொறொன்ரோ பாடசாலைகளில் கொடிகள் அரைக்கம்பத்தில்!

ரொறொன்ரோ பூராகவும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை புளோரிடா படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவப்படுத்தும் பொருட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என ரொறொன்ரோ மாவட்ட கல்விசபை அறிவித்துள்ளது.

புதன்கிழமை பிற்பகல் புளோரிடாவில் மார்ஜொரெ ரோன்மன் டக்ளஸ் உயர்தர பாடசாலையில் துப்பாக்கிதாரி-பாடசாலையின் முன்னாள் மாணவன்-ஒருவன் பாடசாலையின் உள்ளே சென்று 17-பேர்களை கொன்றதுடன் 14-பேர்களை காயப்படுத்தியும் உள்ளான்.

மாணவர்களை வெளியே செல்லுமாறு கட்டளையிட்டு துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளான்.மாணவர்கள் நடைபாதைகளில் குழுமி இருந்த சமயம் ஒரு அரை-தானியங்கி துப்பாக்கியால் அப்பாவி மாணவர்களை சுட ஆரம்பித்துள்ளான்.

இக்கோர சம்பவத்தை தொடர்ந்து ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை குறிப்பிட்ட பாடசாலை மாணவர்களிற்காக அனுதாபம் தெரிவித்தது.

இச்சம்பவம் ரொறொன்ரோ பாடசாலைகளின் மாணவர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என கருதப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் முகமாக கனடிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட பாடசாலை சபை தீர்மானித்தது. ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை மட்டுமன்றி யோர்க் பிராந்திய பாடசாலை சபையும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top