News

வாழ்நாளில் மறக்க மாட்டேன்: 17 பேர் கொல்லப்பட்ட பாடசலையில் சிக்கிய இளம் சகோதரர்களின் உருக்கமான பதிவு

அமெரிக்காவில் 17 பேர் கொல்லப்பட்ட பாடசாலையில் உயிருக்கு பயந்து ஒளிந்திருந்த சகோதரர்கள் இருவர் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட உருக்கமான பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் 19 வயது பயங்கரவாதி ஒருவனால் Marjory Stoneman Douglas உயர்நிலை பாடசாலையில் 17 பேர் கொல்லப்பட்டனர். குறித்த பாடசாலையில் பயின்று வரும் Sam Zeif(18) மற்றும் Matthew(14) ஆகிய இருவரும் தங்களைத்தாமே தேற்றிக்கொண்டும், குறித்த பாடசாலையில் இருந்து உயிருடன் வெளியேறுவது குறித்தும் தங்கள் மொபைலில் தகவல் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது புவியியல் ஆசிரியர் ஒருவரின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த மத்தேயு, அங்கிருந்து தமது சகோதரருக்கு தகவல் பரிமாறியுள்ளார். இதனிடையே அந்த புவியியல் ஆசிரியரும் குறித்த கொலையாளியின் துப்பாக்கி குண்டுக்கு பலியாக, உயிர் பயத்தில் கதறியுள்ளார் மத்தேயு. கொலைகாரன் ஒவ்வொரு அறையாக சென்று கொன்று குவித்து வந்தபோது, சாம் தமது இளைய சகோதரன் பாதுகாப்பாக இருக்கிறான என உறுதி செய்ய தமது மொபைலில் செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால், அதற்கு மாத்தேயு அளித்த உருக்கமான பதில் தற்போது வைரலாகியுள்ளது. பாதுகாப்புடன் இருக்கிறேன் என நம்புகிறேன், உன்னை மிகவும் நேசிக்கிறேன், நீ தான் உண்மையில் எனது மிகச்சிறந்த சகோதரன் என பதில் அனுப்பியுள்ளான். இதற்கு பதிலளித்த சாம், நானும் உன்னை நேசிக்கிறேன், இங்கிருந்து நாம் கண்டிப்பாக உயிருடன் வெளியேறுவோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே துப்பாக்கி சத்தம் ஓய்ந்த பின்னர் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளனர். தமது இளைய சகோதரனை இதுவரை உயர்வாக நடத்தியதில்லை எனவும், ஆனால் இனி ஒருபோதும் அப்படி நடக்காது எனவும் சாம் தெரிவித்துள்ளார். தமது சகோதரனை பாடசாலையில் வெளியே பார்த்த அந்த நொடி வாழ்நாளில் மறக்கவே முடியாத நொடி எனவும் சாம் தெரிவித்துள்ளது, அனைவரையும் உருக வைத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top