கனடாவில் உருகும் பனி, மழை, பனி கலந்த வெள்ளத்தினால் வீடுகள்!

கனடா- பிரம்ரன், மிசிசாகா பகுதிகளில் உருகும் பனி மற்றும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிசிசாகாவில் கிரடிட் ஆற்று பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் மழை தொடர்வதால் வெள்ளம் ஏற்படலாம் என்ற கவலை வீட்டு சொந்தகாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. செவ்வாய்கிழமை இரவு பழைய டெரி வீதி-மெடோவேல் புளுவாட்டிற்கு அருகில் கிரடிட் ரிவர் அண்டிய பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவிலான வெள்ளத்தினால் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
இன்றய வானிலை முன்னறிவிப்பும் மேலதிக மழை வீழ்ச்சி தொடரலாம் என அறிவிக்கின்றது. புதன்கிழமை மேலதிக 20-மில்லிமீற்றர்கள் மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீர்மட்டம் உயர கிரடிட் ரிவர் உடைய ஆரம்பிக்கலாம் எனவும் இதன் காரணமாக வெள்ளம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவடைகின்றது.
வெள்ளம் நிறைந்த பகுதிகளில் நடப்பது வாகனம் செலுத்துவது போன்றனவற்றை நிறுத்துமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சிற்றோடைகள் ஆறுகள் நீரோடைகள் மற்றும் நீர் உறைந்த பகுதிகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.