Canada

63-வயது பணிப்பெண்ணிற்கு கனடிய பாப் கலைஞரின் வெகுமதி!

ஐந்து பிள்ளைகளின் தாயான 63வயது ஹொட்டேல் பணிப்பெண் ஒருவருக்கு கனடிய பாப் இசை கலைஞர் டிரேக் ஆச்சரியம் மிக்க செயல் ஒன்றை செய்துள்ளார். ஐந்து பிள்ளைகளின் தாயான இவர் நான்கு மணித்தியாலங்கள் பயணம் செய்து ஹொட்டேல் ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து குடும்பத்தை நடாத்தி வந்தார் என்பதை அறிந்து கொண்ட டிரேக் ஷாப்பிங், மசாஜ் மற்றும் இரவு உணவு போன்றனவற்றிற்கு டொலர்கள் 10,000வழங்கினார்.

தனது புதிய இசை வீடியோவின் பெயரில் மியாமி பூராகவும் தொண்டு நிகழ்வுகளை இம்மாதம் நடாத்தினார். 31-வயதுடைய டிரோக் மியாமி உயர்தர பாடசாலைக்கு டொலர்கள் 25,000 நன்கொடையாக வழங்கினார். மியாமி பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு டொலர்கள் 50,000உதவித்தொகை வழங்கியதுடன் பல்பொருள் அங்காடி நுகர்வோர்களின் கொள்முதல் கட்டணமாக டொலர்கள் 50,000ற்கும் மேற்பட்ட தொகையையும் வழங்கியுள்ளார்.

ஆனால் இவரது இரக்க குணம் மற்றும் இனிமையிலும் இனிமையான கருணை போன்றனவற்றை வெளிப்படுத்துவதாக ஓடலி பரெட் எனப்படும் ஹொட்டேல் ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றும் ஒருவருக்கு இவர் செய்த நற்காரியம் அமைந்துள்ளதென கூறப்படுகின்றது. டிரேக்கின் பண உதவியைவிட இவரது இரக்க குணம் மற்றும் உணரும் திறன் முதன்மையாக தெரிந்ததென பரெட் தெரிவித்தார். 800டொலர்கள் பெறுமதியான ஒரு சோடி தட்டை காலணி, வலன்ரினோ பிரான்ட் கை பை, டொலர்கள் 2,000 பெறுமதி வாசனை திரவம் நான்கு மற்றும் 6,000டொலர்கள் பெறுமதியான 18-கரட் வெள்ளை தங்க நெக்லஸ் ஒன்று டயமன்களுடன் போன்றனவற்றையும் வாங்கினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top