அபூர்வமான நிலைமையை ஏற்படுத்தியுள்ள காலரா வெளிப்பாடு!

கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா, வன்கூவர் ஐலன்டில் மிகவும் அரிதான அபூர்வமான காலரா வெளிப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை நால்வர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்கூவர் ஐலன்ட் கரையோரப்பகுதியில் இருந்து பெறப்பட்ட ஹெர்ரிங் எனப்படும் எனப்படும் ஒருவகை கடல் மீன் முட்டைகளை சாப்பிட்ட பின்னரே இவர்களிற்கு காலரா ஏற்பட்டுள்ளதென மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் ஷனொன் வார்டஸ் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் அரிதானதென்றும் இதற்கு முன் இதனை தாங்கள் கண்டதில்லை எனவும் இவர் தெரிவித்துள்ளார். குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும் அத்துடன் அதிக அளவு நீரிழப்பிற்கும் வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.
காலரா ஒருவரில் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியதுமாகும்.
இது குறித்து ஐலன்ட் மற்றும் பழங்குடி மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
1800-களில் கனடாவில் காலராவினால் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்நோய் நாட்டில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.
துப்பரவின்மை, நீர் பற்றாக்குறை, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகின்றது. உலகம் பூராகவும் வருடம் தோறும் 100,000ற்கும் மேற்பட்ட மக்கள் இறக்கின்றனரென யு.எஸ்.நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.