News

அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி இருவர் கவலைக்கிடம்.

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10பேர் உயிரிழந்தனர். இருவர் கவலைக்கிடம்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது.

இதனால் அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக ஒரு சிறிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த 950 டன் எடையுள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் பல வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும், அதில் இருவர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை குறித்த பாலத்தை நிறுவியதாகவும், குறித்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்த்து மாணவர்கள் விரைவாக கடந்து செல்லும் பொருட்டு பாலம் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது சம்பவம் நடந்த பகுதியில் தற்போது ஏராளமான அவசர உதவி குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 14 மில்லியன் டொலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குறித்த பாலமானது இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top