Business

அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுக்கு வரிவிதிக்கப்படும்!?

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஏற்ற வகையில் செயல்படாவிட்டால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது, பரஸ்பர வரி விதிக்கப்படும், ” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனம், இந்தியாவில் மோட்டார் பைக்குகளை விற்கிறது. இந்த மோட்டார் பைக்குகளுக்கு, ௫௦ சதவீதம் இறக்குமதி வரி கிறது; இதற்கு, அமெரிக்க அதிபர், டிரம்ப் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.    இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு, அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை. அதனால், இந்தியாவும், வரி விதிக்க கூடாது’ என, டிரம்ப் கூறி வருகிறார்.

சீனாவிலும், இதேபோல், அமெரிக்க கார்களுக்கு, இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இந்திலையில், இது பற்றி அதிபர், டிரம்ப் நேற்று கூறியதாவது:  அமெரிக்க பைக்குகளுக்கு இந்தியாவும், சீனாவும் இறக்குமதி வரி விதித்தால், அமெரிக்காவும், அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, அதே அளவு வரி விதிக்கும். அமெரிக்க கார்களுக்கு, சீனாவில், 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.ஆனால், சீன கார்களுக்கு, அமெரிக்கா, 25 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது.

இந்தியாவும், சீனாவும், வரி விதிப்பை குறைக்காவிட்டால், அமெரிக்காவும், பரஸ்பர வரி விதிப்பில் ஈடுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Latest News

To Top