News

அமெரிக்கா மிச்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி என தகவல்

அமெரிக்காவின் மிச்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், இதில் இருவர் பலியானதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளி தப்பி ஓடியுள்ளார். இதில், குண்டடி பட்ட இருவர் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் 230,00 மாணவர்கள் உள்ளனர். டெட்ரோயிட்டிலிருந்து கிட்டத்தட்ட 125 மைல்கள் தூரத்தில் கல்லூரி அமைந்துள்ளது.

சந்தேக நபர் இன்னமும் பிடிபடவில்லை. ஆனால் சந்தேக நபர் 19-வயதுடைய கறுப்பு மனிதன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ஆபத்தானவன் என கருதப்படுகின்றது.

தாக்குதல் நடத்திய நபரின் அடையாளத்தை வெளியிட்டுள்ள மிச்சிகன் போலீசார், பொதுமக்கள் அவரை கண்டால் போலீசில் தகவல் தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். மேலும், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த மாதம் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நுழைந்த முன்னாள் மாணவன் எந்திர துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியதில் 17 மாணவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top