News

அமெரிக்க பாடசாலைக்கு ஆன்லைன் அச்சுறுத்தல் விடுத்த 14-வயது கனடிய பெண்!

பிரான்வோட் ஒன்ராறியோவை சேர்ந்த 14-வயது பெண் யு.எஸ் உயர்தர பாடசாலைக்கு ஆன்லைன் மூலம் அச்சுறுத்தல் விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்பெண் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. New Hampshire-ல் அமைந்துள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்கு இவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஹனொவர், N.H., பொலிசார் இன்ஸ்ரகிராம் பதிவொன்றில் ஹனொவர் உயர்தர பாடசாலைக்கு துப்பாக்கி சூடு குறித்த அச்சுறுத்தல் ஒன்று விடப்பட்டிருந்தமை பொலிசாரால் கண்டுபடிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் பிரான்ட்வோட்டில்-97,000 மக்களை கொண்ட சமூகம் ஒன்றிலிருந்து ஹமில்ரனிற்கு 30 கிலோ மீற்றர்கள் மேற்கில் இருந்து இந்த சமூக ஊடக அச்சுறுத்தல் வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பெண்ணும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் சிலருக்கு இன்ஸ்ரகிராம் மூலமாக நேரடி தகவல் அனுப்பட செய்தி மற்றய மாணவர்களுடனும் பகிரப்பட்டுள்ளது. முடிவாக தகவல் பாடசாலை அதிகாரிகளிற்கும் பொலிசாருக்கும் பகிரப்பட்;டது. “wanting people to get shot” என்ற தகவல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணிற்கும் மாணவர்களிற்கும் இடையலான தொடர்பு குறித்து தகவல்கள் தெரியவரவில்;லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top