News

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரி, கொழும்பு- கோட்டே ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமும், கையெழுத்து சேகரிப்பும் இன்று நடைபெற்றது. நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுதாகரனின் இரு சிறுவா்களுக்கு கருணை காட்டி அரச தலைவரின் தத்துவத்தின் பிரகாரம் பொது மண்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோசமிட்டனா். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு தமிழ் மக்களுடன், சிங்கள, முஸ்லிம் மக்களும் பங்கேற்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top