News

அரசியல் கைதி சுதாகரனுக்கு பொதுமன்னிப்புக் கோரி வடக்கு மாகாணசபை ஜனாதிபதிக்கு கடிதம்!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி- வடமாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை இன்று தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 119ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்றுஇடம்பெற்றது. இதன்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவைத்தலைவர் தெரிவித்தார். அத்துடன் இதனை வலியுறுத்தும் விதமாக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட விசேட பத்திரம் ஒன்றில் சகல உறுப்பினர்களும் கையெழுத்திட்டதுடன் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top