ஆணையாளரின் அறிக்கைக்கு கனடா வரவேற்பு!

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரால் முன்வைக்கப்பட்டஅறிக்கையை தாம் வரவேற்பதாக கனடா அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை கனடா அறிவித்துள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எனினும் அது முழுமையாக இயக்கப்படல் வேண்டும். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு உண்மையை கண்டறியும் பொறிமுறைஉருவாக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறான நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை முழுமையாகநடைமுறைப்படுத்த காலவரையறை ஒன்றை இலங்கை அறிவிக்க வேண்டும் என்றும் கனடாவலியுறுத்தியுள்ளது.
இதற்கமைய, உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை நடைமுறைகளை நடைமுறைப்படுத்திநல்லிணக்கம் மற்றும் அனைத்து இலங்கையர்களின் சுபீட்சமான எதிர்காலத்தைஉறுதி செய்யுமாறு கனடா கோரியுள்ளது.