Crime

இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி

நல்­லி­ணக்க நகர்­வு­களில் சர்­வ­தேசம் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரும் நிலையில் முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­முறை செயற்­பா­டுகள் மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். இம்­முறை ஜெனி­வாவில் இதற்­கான பிர­தி­ப­லிப்­புகள் வெளிப்­படும் என கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.
அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் அடுத்த வாரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் நாட்டில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிகள் கார­ண­மாக இலங்­கைக்கு ஏற்­படும் சவால்கள் குறித்து வின­வி­ய­போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்­க­மாக நாம் நல்­லி­ணக்க நகர்­வுகள் குறித்து பல்­வேறு வாக்­கு­று­தி­களை கொடுத்­துள்ளோம். அதில் பிர­தா­ன­மா­னது புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வ­தாகும். அதேபோல் நாம் பல்­வேறு செயற்­பா­டு­களில் முன்­ன­கர்­வு­களை கையாண்­டுள்ளோம். காணிகள் விடு­விப்பு விட­யங்­களில் முன்­னேற்­றங்கள் காணப்­பட்­டுள்­ளன. நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் பலவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தகவல் அறியும் சட்­ட­மூலம் கொண்­டு­வந்­துள்­ளமை, தேர்தல் முறைமை மாற்­றங்கள் என்­ப­னவும் இதன் ஒரு பிர­தி­ப­லிப்­பாக கருத முடியும். எவ்­வாறு இருப்­பினும் நாம் இன்னும் முன்­னோக்கி பய­ணிக்க வேண்­டிய தேவை உள்­ளது.

இம்­முறை ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு நெருக்­க­டி­யாக சில விட­யங்கள் அமையும். குறிப்­பாக நாம் இன்னும் முன்­னெ­டுக்க வேண்­டிய சில நட­வ­டி­கை­களில் முன்­னேற்­றங்கள் இடம்­பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­படும். எனினும் அண்மைக் கால­மாக நாட்டில் சிறு­பான்மை மக்கள் மீதான சில அடக்­க­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்ள நிலையில் இவை எமக்கு பாரிய நெருக்­க­டி­யினை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்க முடியும். இந்த சம்­ப­வங்கள் இப்­போதே சர்­வ­தேச ஊட­கங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே இவை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­ப­டலாம்.எனவே அர­சாங்­க­மாக நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய முக்­கிய நட­வ­டிக்­கை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களின் பாது­காப்பு உறு­தி­ப­டுத்­தப்­பட வேண்டும். இதில் ஒரு சிலர் தமது அர­சியல் சாத­கத்­தன்­மை­யினை கருத்தில் கொண்டு இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது.

சிங்­கள மக்­க­ளுக்கு உள்ள அதே உரிமை அந்­தஸ்து இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உள்ளது. ஆகவே அதனை நாம் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும். அங்கீகரிக்கவும் வேண்டும். இனவாதம் மூலம் நாட்டில் ஒருபோதும் ஐக்கியத்தை உறுதிப்படுத்த முடியாது, ஆகவே விரைவில் தீர்வுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top