India

இலங்கை அரசு. ரணில் விக்கிரமசிங்க ஐ.நா வை எமற்றும் அடுத்த நகர்வு!….

போரினால் பாதிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் மீறப்பட்டவர்கள் என்ற அனைத்து தரப்பினருக்கும் நட்டஈடுகளை வழங்கும் முகமாக அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் சமர்ப்பித்துள்ளார் இதன்மூலம் பாதிக்கப்பட்ட அனைவரும் நட்டஈடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அரசாங்கம் குறித்த நடடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top