Crime

இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் – ஊரடங்கு உத்தரவு

இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 


அங்கு நிலைமையை சீராக்கும் நோக்கில் நாளை காலை 6 ஆறு மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலிஸார் கூறுகின்றனர்.

பிப்ரவரி 22 ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான 41 வயதான ஒரு சிங்கள இனத்தவர் ஞாயிறன்று இரவு மரணமடைந்ததை அடுத்தே திஹன பகுதியில் வன்செயல்கள் ஆரம்பித்தன.

இரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மோதியதில் ஏற்பட்ட சம்பவத்திலேயே அவர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

தெல்தெனிய பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சிலரே இவரை தாக்கியதாக கூறி, திஹன பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகள் உட்பட சொத்துக்களை தாக்கி எரித்துள்ளனர்.

அதனையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த போலிஸாரின் சிறப்பு அதிரடிப்படை அங்கு காவலில் ஈடுபட்டுள்ளது.

திங்களன்று பிற்பகலிலும் தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. தாக்குதலாளிகளை கலைக்க போலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் செய்துள்ளனர்.

இதனையடுத்து கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய போலிஸாரினார் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை தொடர்கிறது.

கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கடைகளும், பள்ளிவாசலும் தாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top