Crime

இலண்டனில் காத­லியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் , இலங்கை இளைஞன்!

இலண்டன், மன்­செஸ்டர் பகு­தியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காத­லியை மிக மோச­மான பாலியல்                              சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குள்­ளாக்கி வன்­பு­ணர்ந்த குற்றச் சாட்­டுக்­காக 12 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ள அதே வேளை தண்­டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு­க­டத்­தப்­ப­டவும் உள்ளார். இவர் ஒரு­வித ஆளுமை கோளாறால் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என வைத்­திய அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 25 வய­தான இவ­ரது பெயர் அகம்­போதி டி சொய்சா என்­ப­தாகும்.

மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் மாண­வ­ரான இவர் வடக்கு இலண்­டனை வதி­வி­ட­மாகக் கொண்­டவர். இலண்டன் மன்­செஸ்டர் பகு­தியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து தனது காத­லியை பாலியல் ரீதி­யாக மிக மோச­மாக சித்­தி­ர­வ­தைப்­ப­டுத்­திய இவர் இரத்தம் வரும் வரை தாக்­கி­யுள்ளார்.

அவரை நிர்­வா­ண­மாக நிற்கும் படி வற்­பு­றுத்­திய அவர் மயக்­க­முறும் வரை தாக்­கிய பின்னர் காத­லியை தனது கைய­டக்­கத்­தொ­லை­பே­சியில் ஒளிப்­ப­திவும் செய்­துள்ளார். அதன் பின்னர் இவர் நித்­தி­ரைக்கு சென்று விட்­டதால் ஹோட்டல் அறை­யி­லி­ருந்து தப்­பித்த அவ­ரது காதலி இது குறித்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சுமார் நான்கு தடவை இவர் தனது காத­லியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

மன்­செஸ்டர் நீதி­மன்­றத்தில் பாதிக்­கப்­பட்ட பெண் வழங்­கிய வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் டி.சொய்சா தான் ஒரு கோடீஸ்­வரர் என்று காட்­டிக்­கொண்­ட­தோடு பல பொய்­களை கூறி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ஹோட்டல் அறையில் வைத்து பாதிக்­கப்­பட்ட பெண்ணை அச்­சு­றுத்தும் வகையில் தான் 37 கொலை­களை செய்த தொடர் கொலை­யாளி என்றும், லண்டன் பாது­காப்பு சேவைப் பிரிவின் காவ­லர்கள் தன்னை சுற்றி எப்­போதும் இருப்பர் என்றும் பெரு­மை­ய­டித்­துள்ளார்.

தனது முதல் சந்­திப்பின் போது காத­லிக்கும் அவ­ரது தோழி­க­ளுக்கும் பரி­சுப்­பொ­ருட்­களை வாரி வழங்­கிய டிசொய்சா தனது தந்தை ஒரு எண்ணெய் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் என்றும் லண்டன், அமெ­ரிக்­காவின் லொஸ்­ஏஞ்சல்ஸ் ஆகிய நக­ரங்­களில் தனக்கு பெறு­ம­தி­யான சொத்­துக்கள் இருப்­ப­தா­கவும் கூறி­யுள்ளார்.

இச்­சம்­ப­வத்தை விசா­ரித்த மன்­செஸ்டர் நீதி­மன்ற நீதவான் மார்ட்டின் ருட்லாண்ட், டி. சொய்­சா­வைப்­பற்றி கூறும் போது இவர் தனது காத­லிடம் உணர்ச்­சி­க­ர­மாக மிரட்டல் விடுத்து காரி­யத்தை சாதித்­துக்­கொண்டார் என்றும், அவ­ரது குடும்­பத்­தினருக்கு அவர் மீது வெறுப்பு உரு­வா­வ­தற்­காக ஒரு தடவை காத­லியின் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யி­லி­ருந்து அவ­ரது மாமிக்கு தகாத வச­னங்­க­ளுடன் குறுந்­த­க­வலை அனுப்­பி­யுள்ளார் என்றும் தெரி­விக்­கிறார்.

பாலியல் துஷ்­பி­ர­யோகம், மற்றும் சித்­தி­ர­வதை, உட­லுக்கு தீங்கு விளை­விக்கும் செயற்­பா­டுகள், சேதம் விளை­வித்­தமை உட்­பட முந்­தைய குற்­றங்­க­ளுக்கும் சேர்த்து இவ­ருக்கு 12 வருட சிறைத்­தண்­ட­னையும் ஒத்தி வைக்­கப்­பட்ட மேல­திக 5 வருட சிறைத்­தண்­ட­னையும் வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அவ­ரது மன­நிலை தொடர்­பான வைத்­திய அறிக்­கை­களும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

டிசொய்சா செய்த குற்­றங்­களின் தீவி­ரத் ­தன்­மையின் அடிப்­ப­டையில் சிறைத் தண்­ட­னைக்­குப்­பின்னர் அவர் தானா­கவே இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­டு வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top