News

உலகளாவிய ரீதியில் சேர்க்கப்பட்ட கையெழுத்துக்கள் ஐ.நாவில் சமர்பிப்பு .

அனைத்துலக தமிழர் பேரவை, தமிழர் இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் சேர்க்கப்பட்ட கையெழுத்துக்கள் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகத் தமிழர் பேரவை, தமிழர் இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்களிடம் மாபெரும் கையெழுத்து இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

சென்னையில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற கையெழுத்து இயக்கத்தில் கட்சிகள், அமைப்புகளைக் கடந்து பெரும் திரளாக ஒன்றிணைந்து வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டனர்.

கையெழுத்துப் போராட்டம் தொடர்பில் அனைத்துலக தமிழர் பேரவை – தமிழர் இயக்கம் கருத்து தெருவித்தபோது, இலங்கை அரசாங்கத்தால் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பிற்கு சர்வதேச சமூகத்தின் முன் நீதி கிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

இந்த நோக்கத்துக்காக உலகெங்கும் மனித நேயத்துடன் களமாடிக்கொண்டிருக்கின்ற அனைத்து வழக்கறிஞர்களும் இக்கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமிழீழ மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பே ஒரே தீர்வென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top