Canada

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் குறித்த அறிக்கையில் கனடா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் குறித்த அறிக்கையில் கனடா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. மீண்டும் நோர்டிக் நாடுகள் முதல் இடத்தை தட்டிக்கொண்டன. இந்த வருடம் வின்லாந்து முதலாவதாக உயர்ந்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் இருந்து வின்லாந்து முதலாவது இடத்திற்கு வந்துள்ளது. பெரும்பாலும் முதல் இடத்தை பெறும் பட்டியலில் குளிர்ச்சியான காலநிலை கொண்ட நாடுகள் இடம்பெறுவது கவனிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்செயல் நிகழ்வு ஆக இருக்க முடியாதென தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான காலநிலை சிறந்த மனநிலையை உருவாக்க ஒத்துழைக்கின்றதென கனடிய பொருளாதார வல்லுநர் ஜோன் எவ். ஹெலிவெல் தெரிவித்துள்ளார்.


ஆறு வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையில் கனடா நான்கிற்கும் ஏழிற்கும் இடையில் வந்துள்ளது. சிறந்த 10 நாடுகள் வரிசையில் ஒரே நாடுகள் இடம்பெறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக வரிசையில் மாற்றங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
யு.எஸ் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்கா மிகப்பெரிய ஆதாயம் பெற்றுள்ளது. 2015ல் குறைந்த பட்ச சந்தோஷம் மிக்க நாடாக அமைந்திருந்து தற்சமயம் உயர்நிலையாக 17-வது இடத்தை எட்டியுள்ளது. கிழக்கு ஆபிரக்க நாடான புருன்டி 156வது இடத்திற்கு வந்துள்ளது.

10 இடங்களும் சுதந்திர தேர்வு, தேவையான நேரங்களின் சமூக ஆதரவு, சமுதாய ஊழல், தாராள மனப்பான்மை போன்றவை குறித்த கணிப்பில் தரப்படுத்தப்படுவதாக அறியப்படுகின்றது. இந்த வருட கணிப்பீட்டில் முதல் தடவையாக நாடுகளில் குடிவரவாளர்கள் மகிழ்ச்சியும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவீட்டில் கனடா சிறப்பானதென-பெரும்பாலான புலம் பெயர்வோர்களை ஏற்று கொள்ளும் நாடு- கணிக்கப்பட்டுள்ளது.

முதல் 20-இடங்களை பிடித்த நாடுகள்: 1-வின்லாந்து. 2-நோர்வே 3-டென்மார்க் 4-ஐஸ்லாந்து 5-சுவிட்சலாந்து 6-நெதர்லாந்து 7-கனடா 8-நியு சீலந்து 9-சுவீடன் 10-அவுஸ்ரேலியா 11-இஸ்ரேல் 12-ஆஸ்ரியா 13- கோஸ்ரரிக்கா 14- அயர்லாந்து 15-ஜேர்மனி 16-பெல்ஜியம் 17-லக்ஷம்பேர்க் 18-யு.எஸ் 19-யு.கே. 20-ஐக்கிய அரபு நாடுகள்

மொத்தம் 156 நாடுகள் இந்த சர்வேயில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடமே கிடைத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top