எகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து – 16 பேர் பலி,20 பேர் காயம்.

எகிப்து நாட்டின் பெஹேய்ரா மாகாணத்தில் பயணிகள் ரெயிலில் இருந்த இரண்டு பெட்டிகள் தனியே கழண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் 16 பயணிகள் பலியானதாகவும்,20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெஹேய்ரா மாகாணத்தில் பயணிகள் ரெயிலில் இருந்த இரண்டு பெட்டிகள் தனியே கழண்டு பக்கத்து தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியதில் 16 பயணிகள் பலியானதாகவும்,20 பேர் காயமடைந்ததாகவும்அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் உள்ள ரெயில் போக்குவரத்தில் எப்போதுமே பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவது இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போன்ற ரெயில் விபத்து ஒன்றில் 42 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.