Canada

ஏஜக்ஸ் பகுதி வீடொன்றிற்குள் இருவர் படுகொலை மூன்றாவதாக பெண் தீவிரமான காயங்கள்!??

பிந்திய செய்தி >        காவல்துறையினர்  ஆண் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் . மூன்றாவது பாதிக்கப்பட்டவர் வைத்திய சாலையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது

ரொறொன்ரோ-ஏஜக்ஸ் பகுதி வீடொன்றிற்குள் இருவர் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்தில் இருந்து வாகனத்தில் ஒடிவிட்ட சந்தேக நபர் ஒருவரை தேடும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

பேய்லி வீதி மற்றும் வெஸ்ட்னி றோட் பகுதியில் அமைந்துள்ள ஹில்லிங் டிரைவ் 36-இலக்க வீட்டில் இப்படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் சம்பவம் நடந்துள்ளது மூன்றாவதாக பெண் ஒருவர் தீவிரமான காயங்களுடன்    உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் டொரொன்டோ மருத்துவமனையில்  அவசர வைத்திய பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆண் சந்தேக நபர் ஒருவர் கறுப்பு நிற வாகனமொன்றில் வெளியேறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வாகனம் நெடுஞ்சாலை 401ல் புரொக் வீதியில் விடப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எது வித விபரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

விபரங்களை வெளியிட்டு புலன்விசாரனையாளர்களின் விசாரனைக்கு பங்கம் விளைவிக்க தாங்கள் விரும்பவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  ஹில்லிங் டிரைவில் பொலிஸ் மற்றும் இரு அம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  தாய் ஒருவரும் அவரது வாலிப வயது ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பையன் 9-ம் வகுப்பில் படிப்பவன்;. மகள் அவனை விட சிறு வயது மூத்தவள் என கூறப்படுகின்றது.

   

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top