Canada

ஒன்ராறியோவில் இலவச பாலர் பாடசாலை சிறுவர் பராமரிப்பு!

ரொறொன்ரோ-ஆயிரக்கணக்கான பிள்ளைகளிற்கு இலவச பாலர்-பாடசாலை சிறுவர் பராமரிப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒன்ராறியோவின் லிபரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாகாணம் பூராகவும் 2020-ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான 2.2-பில்லியன் டொலர்கள் முன் முயற்சியை ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின், நிதி அமைச்சர் சார்ள்ஸ் சுசா மற்றும் கல்வி அமைச்சர் இந்டிரா நாயுடு-ஹரிஸ் செவ்வாய்கிழமை ரொறொன்ரோ பாடசாலை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

பிள்ளைகள் இரண்டரை வயதை அடைந்ததும் முழு நேர உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு ஆரம்பிக்கப்படும்.
பிள்ளைகள் முழு நாள் மழலையர் பள்ளிக்கு தயாராகும் வரையில் தேவைப்படும் சகல செலவுகளையும் இந்த திட்டம் உள்ளடக்கும் எனவும் அறியப்படுகின்றது.

ஜூன் தேர்தலிற்கு முன்னராக வர இருக்கும் இறுதி வரவு செலவு திட்டம் மேசைக்கு வர ஒரு நாள் முன்பாக அரசாங்கம் இதனை வெளிக்கொணர்ந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வருடமொன்றிற்கு குடும்பத்தினர் 17,000 டொலர்களை சேமிக்கலாம் எனவும் வின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வோட்டுக்களை வெல்லும் நோக்குடன் இவ்வாறு செய்கின்றதென புரோகிறசிவ் கன்சவேட்டிவ் சட்ட மன்ற உறுப்பினர் லிசா மக்லியோட் தெரிவிக்கின்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top