Canada

ஒன்ராறியோவில் 65-மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு பரிந்துரை மருந்துகளை இலவசம்

ரொறொன்ரோ– மருந்தியல் திட்டததை விரிவாக்கம் செய்து 65-மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு பரிந்துரை மருந்துகளை இலவசமாக வழங்க உள்ளதாக ஒன்ராறியோ லிபரல் அரசாங்கம் தெரிவிக்கின்றது.

2019 ஆகஸ்ட 1-லிருந்து வயதானவர்கள் 4,400பரிந்துரை மருந்து வகைகளிற்கு விலக்கு அல்லது இணை-செலுத்துதல் போன்ற கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை என ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார். 2020-21ல் முழுமையாக செயற்படும் போது இத்திட்டத்திற்கு வருடமொன்றிற்கு 575-மில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் வின் தெரிவித்தார்.

கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரழிவு மற்றும் ஆஸ்துமா போன்றன வற்றிற்கான மருந்துகளும் இத்திட்டத்திற்குள் உள்ளடங்கும். மாகாணத்தின் மார்ச் 28 வரவு செலவுதிட்டத்தின் போது இவை சமர்ப்பிக்கப்பட உள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top