ஒரு தீயணைப்பு வீரனாக ரொறொன்ரோவை சேர்ந்த ஐந்து வயது சிறுவன்?..

மாற்றோ பாபா என்ற சிறுவன் தற்சமயம் இரத்த புற்று நோயுடன் போராடி வருகின்றான். சிகிச்சைக்கு செல்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்ல வேண்டும் என கூறப்படுகின்றது.
ஒரு தீயணைப்பு வீரனாக வேண்டும் என்ற இவனது கனவை தெரிந்து கொண்ட வாஹன் தீயணைப்பு சேவைகள் இந்த ஐந்து வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
இவனது ஐந்தாவது பிறந்த நாளான செவ்வாய்கிழமை வாஹன் தீயணைப்பு பிரிவின் தலைமை அதிகாரி லறி பென்ட்லி மற்றும் ஏனைய வீரர்கள் கொண்ட குழு ஒன்று இவனது வீட்டிற்கு சென்றனர். அவனிற்கு சொந்தமாக ஹெல்மெட ஒன்றையும் சீருடையையும் பிறந்த நாள் கேக்கையும் வழங்கியதுடன் தீயணைப்பு டிரக்கில் அவனை பாடசாலைக்கு அழைத்து சென்றனர். விளக்குகள் மற்றும் சைரன்களுடன் வாகனத்தில் பாடசாலை அடைந்ததும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிரியர்கள் அவனை வாழ்த்தினர்.
இந்நிகழ்வு தலைமை அதிகாரி பென்ட்லியையும் கண்ணீர் சிந்த வைத்தது.
இச்சம்பவம் குடும்பத்தினரின் உணர்ச்சி போராட்டத்தை உச்ச கட்டத்திற்கு இட்டு சென்றுள்ளது. தீயணைப்பு குழுவின் இளம் அங்கத்தவரான இச்சிறுவன் தனது ஐந்தாவது பிறந்த நாளன்று மிக மகிழ்ச்;சியாக காணப்பட்டான்.