India

கணவரை பார்க்க கண்ணீருடன் வந்திறங்கிய சசிகலா:

சென்னையில் காலமான கணவர் நடராஜனை பார்ப்பதற்கு சசிகலா தஞ்சாவூர் வந்தடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின் அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம், விளார் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக விளார் கிராமம் வந்தடைந்துள்ளார். வரும் போது யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்த சசிகலா, நீண்ட நேரம் அழுதபடியே இருந்துள்ளார். இதற்கிடையில் சரியாக இரவு 7.15 மணியளவில் நடராஜன் உடல் வீட்டுக்குள்ளே கொண்டு செல்லப்பட்டது.

அப்போது கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரே காரில் சசிகலா மற்றும் தினகரன் தஞ்சாவூர் சென்றனர். அப்போது தொண்டர்கள் கூட்டம் காரைச் சுற்றி நின்று கொண்டிருந்ததால் பத்து நிமிடங்களுக்கு மேல் சசிகலா காரிலேயே அமர்ந்திருந்து பின் வீட்டின் உள்ளே சென்றார். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடத்தப்பட்டு மாலை உடல் தகனம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top