கண்டி, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவ இடத்தில் அமைச்சர்

கண்டி அக்குரணை, அம்பதென்ன, வெலேகட பகுதியில் சற்றுமுன்னர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மர ஆலை தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளது. பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள குறித்த மர ஆலை சற்றுமுன்னர் அடையாளம் தெரியாதவர்களால் தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், விரைந்து தீணை அணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.