கனடாவில் சொந்த படுக்கை அறைக்குள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட 13-வயது பெண்?

சனிக்கிழமை காலை 13வயது பெண் ஒருவர் அவரது படுக்கை அறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை குறித்து பீல் பிராந்திய பொலிசார் சந்தேக நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மிசிசாகா பகுதியில் றத்பேர்ன் வீதி கிழக்கு மற்றும் டிக்சி வீதி அருகில் ஹாட்வீல்ட் குரோவ் மற்றும் லவ்லேடி கிரசென்ட் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சனிக்கிழமை காலை 7மணியளவில் சம்வம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிற்கான சிறப்பு பிரிவுகளின் புலனாய்வு அதிகாரிகள் பெண் நித்திரையாக இருக்கையில் அவளை சந்தேக நபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டதாக தெரிவிக்கின்றனர். 13-வயதிற்குட்பட்டவள் என பொலிசார் தெரிவிக்கும் பெண் பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
சந்தேக நபர் 20-வயது மதிக்கத்தக்க வெள்ள நிறமுடையவன் என கூறப்பட்டுள்ளது. இவன் பாதிக்கப்பட்டவரிற்கு தெரிந்தவனா என்பது தெரியாத போதிலும் சந்தேக நபரை ஒரு அந்நியன் என பொலிசார் கணித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு சம்பவம் இதுவரை இப்பகுதியில் நடந்ததில்லை என கடந்த 25 வருடங்களிற்கும் மேலாக வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவரின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் வீட்டில் இருந்துள்ளனர். இப்பகுதியில் சாட்சியங்களை ஆராய்வதற்காகவும் உதவுவதற்காகவும் கொமான்ட் அலகு ஒன்று அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளது.