Canada

கனடா மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!!

கனடாவில் சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு கனடா பகுதியில் உள்ள பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரும்ப பெறுமாறு கனடா உணவு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் அதன் குறியீடு எண் BBMA 18-OC-11 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சிக்கன் நக்கட்ஸ் சால்மனல்லா பக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் குமட்டல், காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றன ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top