Canada

கனடிய அரசாங்கம் ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றுகின்றது!.

ஒட்டாவா- பிரிட்டிஷ் தாக்குதலை தொடரந்து கனடாவில் பணிபுரியும் ரஷ்ய ராஜதந்திரிகளை அரசாங்கம் வெளியேற்றுகின்றது. வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்ரியா விறிலான்ட் திங்கள்கிழமை இத்தகவலை அறிவித்துள்ளார்.ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தில் அல்லது மொன்றியலில் அமைந்துள்ள ரஷ்ய கூட்டமைப்பில் பணிபுரியும் துணை தூதர் நால்வரை கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவதுடன் மேலதிக மூன்று பணியாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றதென அறிவித்துள்ளார்.

கனடாவின் பாதுகாப்பை கீழறுக்க அல்லது எமது ஜனநாயகத்தில் தலையிட தங்கள் ராஜதந்திர அந்தஸ்த்தை பயன் படுத்தி கொண்டனர் என இந்த நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என விறிலான்ட் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய ராஜ்யத்தில் இடம்பெற்ற நரம்பு தாக்குதலை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எனவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பிட்ட தாக்குதலின் எதிரொலியாக டிரம்ப் நிர்வாகமும் 60 ரஷ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top