Canada

கனடிய நகரங்களில் துப்பாக்கி கட்டுப்பாடு பேரணி!

கனடிய நகரங்கள் பல, கனடா மற்றும் அமெரிக்காவில் கடுமையான துப்பாக்கி கட்டுபாடு சட்டங்களை அமைக்க கோரி பேரணிகளை நடாத்துகின்றன. பளொரிடா பார்க்லான்ட் உயர்தர பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 17-பேர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக இப்பேரணிகள் இடம்பெறுகின்றன.


அமெரிக்க மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாசிங்டன் டி.சியில் இடம்பெறும் March for Our Lives பேரணி நிகழ்விற்கு ஆதரவாக மொன்றியல் ரொறொன்ரோவில் பல நூற்றுக்கணக்கான மக்கள் இப்பேரணியில் பங்கு கொள்கின்றனர். ரொறொன்ரோவில் ஆர்ப்பாட்டகாரர்கள் நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் இருந்து 1.5-கிலோ மீற்றர்கள் அணிவகத்து குயின்ஸ்பார்க் வரை சென்றுள்ளனர்.

வன்கூவரில் பேரணி காலை 10மணிக்கு ஆரம்பமாகியது. ஒட்டாவா பூராகவும் உயர்தர பாடசாலை மாணவர்கள் இணைந்து பேரணியை ஒழுங்கு செய்துள்ளனர். வாட்டர்லூ பிராந்திய பேரணி வில்விரெட் லோறியேர் பல்கலை கழகத்தில் இடம்பெறுகின்றது. வாசிங்டன் டிசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி சிறிய அளவிலான ஒன்று கூடல்கள் உலகம் பூராகவும் நூற்று கணக்கான நகரங்களில் இடம்பெறுகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top