Health

கர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சைகளை தவிர்ப்பது எவ்வாறு.?

பெண்­களின் வாழ்க்கைக் காலத்தில் 40 வயது தாண்­டி­ய­வுடன் கர்ப்­பப்பை தொடர்­பான பல நோய்கள் ஆரம்­பிப்­பது வழக்கம். இதில் அதி­க­ரித்த மாத­விடாய்ப் போக்கு, தாங்­க­மு­டி­யாத வயிற்­று­வலி மற்றும் மாத­விடாய் கால வயிற்­று­வலி, கர்ப்­பப்பை கட்­டிகள், பை­பு­ரோயிட் கட்­டிகள், சூலகக் கட்­டிகள் என்­பன முக்­கிய இடத்தைப் பிடிக்­கின்­றன. இவற்றில் எவை பெண்­க­ளுக்கு ஆபத்­தா­னவை அல்­லது ஒரு புற்று நோயாக மாறக்­கூ­டி­யவை என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இவ்­வாறு ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு 3D SCAN பாவிக்க முடியும். 3D ஸ்கானில் கர்ப்­பப்­பையில் எந்த இடத்தில் என்ன பிரச்­சினை என்­பதைச் சரி­யாகக் கண்­ட­றிய முடியும்.

கர்ப்­பப்­பையில் உள்ள பிரச்­சி­னை­களை சரி­யாக அறிந்தால் கர்ப்­பப்­பையை எடுக்­காமல் சரி­யான தீர்வு வழங்க முடியும். அதா­வது கர்ப்­பப்­பையில் உள்ள ஒரு சிறிய பொலிப் (POLYP) போன்ற ஒரு சதை வளர்ச்­சியால் அதி­கப்­ப­டி­யான மாத­விடாய் ஏற்­ப­டு­வது வழக்கம். இது மருந்து மாத்­தி­ரை­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. ஆனால் கடந்த காலங்­களில் இதனைக் கட்­டுப்­ப­டுத்த கர்ப்­பப்­பையை அகற்­று­வ­துதான் வழக்­க­மாக இருந்­தது. ஆனால் இதற்­கான சரி­யான காரணம் சதை­வ­ளர்ச்­சி­யான பொலிப் (POLYP) தான் என கண்­ட­றிந்தால் இதனை மட்டும் அதா­வது பொலிப் என்ற சதையை மட்டும் அகற்­றலாம். இவ்­வாறு அகற்­றும்­போது கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டா­மலே சரி­யான தீர்வு கிடைக்­கின்­றது. எனவே கர்ப்­பப்பை அகற்ற வேண்டி உள்­ளதே என கவ­லைப்­படும் பெண்­க­ளுக்கும் சத்­தி­ர­சி­கிச்­சையை நினைத்து பின்­வாங்கும் பெண்­க­ளுக்கும் இவ்­வாறு கர்ப்­பப்­பையை எடுக்­காமல் நோய்க்கு மட்டும் சரி­யான தீர்வு கொடுப்­பது பெரிய வரப்­பி­ர­சா­த­மாக உள்­ளது.

கர்ப்­பப்­பையில் பைபு­ரோயிட் கட்டி பெரி­தாக வளர்ந்­தி­ருந்தால் 40–45 வய­து­டைய பெண்­களின் கர்ப்­பப்­பையை முழு­தாக எடுப்­பது வழ­மை­யாக இருந்­தது. ஆனால் இன்­றைய தொழில்­நுட்­பத்தில் கிடைக்­கப்­பெற்ற 3D–4D ஸ்கான் மூலம் பைபு­ரோயிட் கட்டி என்­ப­தனை சரி­யாக உறுதி செய்து, பின்னர் கட்­டியை மட்டும் எடுத்தால் போதும் என்ற முறையில் கர்ப்­பப்­பையை அகற்­றாமல் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ள முடியும். இத­னையும் இப்­பொ­ழுது லப்­ரஸ்­கோப்பி முறை­மூலம் (Laparoscopy) சிறிய ஒரு துளையில் செய்­யக்­கூ­டி­ய­தாக மாற்றம் வந்­துள்­ளது. எனவே வயிற்றை வெட்ட வேண்­டுமா என்ற ஏக்கம் இல்­லாது இம்­மு­றையில் ஒரு சிறிய துளையைப் போட்டு கர்ப்­பப்­பையில் எந்த அளவு பெரிய கட்­டி­யாக இருந்­தாலும் சரி எடுக்­க­கூ­டி­ய­தாக உள்­ளது.

அடுத்­த­தாக கர்ப்­பப்பை கூடு­த­லாக அகற்­றப்­பட்டு வரு­வது சூல­கங்­களில் ஏற்­படும் கட்­டி­க­ளுக்­காகும். இவ்­வாறு சூல­கத்தில் கட்டி என்­ற­வுடன் பெரி­த­ளவில் பதற்­றப்­ப­டாது சரி­யான விப­ரங்­களை 3D ஸ்கானில் பெறு­வதன் மூலம் இவை சாதா­ரண நீர் நிறைந்த கட்­டி­களா அல்­லது சிக்கல் தரக்­கூ­டிய கட்­டி­களா என அறியக் கூடி­ய­தாக உள்­ளது. சாதா­ரண நீர் நிறைந்த சூலகக் கட்­டிகள் என்றால் இதற்­காக கர்ப்­பப்­பையை எடுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. இவற்­றையும் லப்­ரஸ்­கோப்பி துளை மூலம் நீர் நிறைந்த கட்­டி­களை இல­கு­வாக அகற்ற முடியும். எனவே கர்ப்­பப்பை அகற்­றா­மலே சிகிச்சை வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

அடுத்­த­தாக குடும்­பத்தில் குழந்தைத் தேவை­களைப் பூர்த்தி செய்து இரண்டு, மூன்று பிள்­ளை­க­ளுக்குத் தாயாக இருந்து வரும் 40 தொடக்கம் 50 வயது வரை­யான பெண்­களை எடுத்தால் எண்டோ மெற்­றி­யோ­சியஸ் (Endometriosis) மற்றும் அடி­னோ­ம­யேசிஸ் (Adenomyosis) கர்ப்­பப்பை நோயால் வயிற்­று­வலி வந்து அவ­திப்­ப­டு­கின்­றனர். கர்ப்­பப்­பையை எடுத்­தால்தான் இந்த நோய் குண­மாகும் என நினைக்க வேண்டாம். ஏனெனில் கர்ப்­பப்­பையை எடுக்­கா­மலும் GNRH ஊசி மூல­மா­கவோ லப்­ரஸ்­கோப்பி சிகிச்சை மூல­மா­கவோ சிகிச்­சைகள் வழங்கக் கூடி­ய­தாக உள்­ளது.

ஆகையால் கடந்த காலங்­க­ளைப்போல் அல்­லாது கர்ப்­பப்பை பிரச்­சி­னை­களை குணப்­ப­டுத்த ஏரா­ள­மான மாற்று வழி­மு­றை­களும் சிகிச்­சை­களும் வந்­துள்­ளன. ஆதலால் இவற்­றுக்கு கர்ப்பப்பையை அகற்றுவது தான் உரிய தீர்வு என நினைக்க வேண்டாம் . இவற்றை தீர்மானிக்க 3D மற்றும் 4D ஸ்கான் முறைகள் பெரிதும் உதவும். எனவே கர்ப்பப்பையை எடுக்க விரும்பாது நோயால் அவதிப்படும் பெண்களுக்கு நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்க்கையைத் தொடர புதிய சிகிச்சை முறைகள் பெரிதும் உதவுகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top