காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காதலன் கைது .

கனடாவில் காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் Mississauga நகரில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் சுடப்பட்டதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பொலிசார் விரைந்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
விசாரணையில் குறித்த பெண்ணின் பெயர் Alicia Lewandowski (25) என்பதும், Joseph Chang (39)என்பவர் சுட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், குற்றவாளி பயன்படுத்திய கார் Torontoவிலுள்ள Dufferin Streetஇலுள்ள McDonald’s ரெஸ்டரண்ட் ஒன்றினருகே நிற்பதாக தகவல் கிடைத்தது.
ஆனால் Chang அந்தக் காரில் இல்லை, உடனே McDonald’sக்குள் நுழைந்த பொலிசார் ரெஸ்டரண்டுக்குள் இருந்த Changஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட Chang நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை மார்ச் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், காதலர்களுக்குள் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது