கிளிநொச்சிப் பள்ளிவாசல்களுக்கு இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியே இந்த பாதுகாப்பு இன்றுகாலை முதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.