News

சிரியாவில் இடம்பெறும் மனித குலத்திற்கு எதிரான படுகொலையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவில் இடம் பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இடம் பெற்றது.

சிரியாவில் இடம் பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் குழந்தைகள் முதல் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அவர்களின் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் மூர்வீதி ஜும்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top