Canada

சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பெரிய குகையை சி.பி.சி எனும் சாகச குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

மொன்றியல் நகரின் பாதாளத்தில் பயணம் மேற்கொண்டபோதே குறித்த குழு இந்த குகையினை கண்டுபிடித்துள்ளது.

ஏரி ஒன்று நீண்டு செல்லும் குறித்த குகை, பனியுகத்தின் போது உருவாகியிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குகையானது, குறைந்தபட்சமாக 200 மீட்டர் நீளமும், ஆறு மீட்டர் உயரமும் மற்றும் மூன்று மீட்டர் அகலமும் உடையதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த குகையின் ஒரு முக்கிய பகுதியினை, பல ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்கள் தான் திறந்துள்ளனர்.

எனினும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கே இப்படி ஒரு குகை இருப்பது இதுவரை தெரியாமல் இருந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top