News

செக் குடியரசு நாட்டில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி

செக் குடியரசு நாட்டில் க்ராலுபி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

செக் குடியரசு நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள க்ராலுபி நகரில் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று அந்த ஆலையில் உள்ள ரசாயன கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top