India

செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது

இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க
ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், திருப்பதி – கடப்பா சாலையில் வந்த ஒரு லாரியை சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்றனர்.

அந்த லாரி ஆஞ்சநேயபுரம் வனத்துறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது. இந்த துரத்தலின்போது, ஊடகத்தினரும் உடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.

அந்த லாரிக்குள் காவல்துறையினர் ஏறி சோதனையிட்டபோது, லாரியின் தார்ப்பாய்க்குள் இருந்த 80 பேர் சிக்கினர்.

இவர்கள் ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக செல்வதாகக் கூறி அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அவர்களை விசாரித்தபோது, அவர்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இவர்களிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் படித்தவர்கள் எனக் கூறுகின்றனர். BBC

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top