போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் தொனிபொருளில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது.
25ம் அறையில் இடம்பெற்றிருந்த இப்பக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய Richard J Rogers இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
தாமதிக்கும் தந்திரத்தனை சிறிலங்கா கடைப்பிடித்து அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை தட்டிக்கழிக்கின்றது என சிறிலங்கா மீது கடுயைமான விமர்சனத்தை முன்வைத்த Stephane J Rapp , ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் கடுயைமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் நிகழ்வினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஒபமாவின் நிர்வாகத்தில் போர் குற்ற விவகாரங்களுக்கான தூதரகாக இருந்த Stephane J Rapp
, பல தடவையில் சிறிலங்காவுக்கு முன்னர் பயணம் செய்திருந்தவர்.
தற்போது தமிழர் தரப்பு ஏற்பாடு செய்திருந்த இப்பக்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப்பொறிமுறைக்கு குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.
இந்நிகழ்வுக்கு அனைத்துலக ஈழத் தமிழரவை , பசுமைத்தாயகம் ஆகிய அமைப்புக்கள் உறுதுணை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.