காற்றின் வேகம் தாங்க முடியாமல் விமானநிலையத்தின் மேல் கூரை விழுந்ததால் அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடியுள்ளனர். சீனாவின் Jiangxi மாகாணத்தில் Nanchang பகுதியில் Nanchang Changbe என்ற சர்வதேச விமானநிலையம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரப்படி 3.35 மணியளவில் இந்த விமானநிலையத்தின் டெர்மினல் 2 பகுதியில் மேல் இருந்த கூரை திடீரென்று யாரும் எதிர்பார்க்காத போது விழுந்து நொறுங்கியது.
அப்போது அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் ஓடியுள்ளனர். இது குறித்து விமான நிலையம் சார்பில் தெர்விக்கையில், காற்றின் வேகம் அதிகமிருந்ததால், விமானநிலையத்தில் மேல் கூரை கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த வித காயமோ, பலியோ ஏற்படவில்லை, அங்கிருந்த வாகனங்கள் மீது விழுந்துள்ளதால், ஒரு சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால், வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விமானநிலையம் 1999-ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.