Canada

தீப்பற்றி வாகன மோதலில் இருந்து, வாகனத்தின் சாரதி உயிருடன் பிழைத்த அதிஷ்டவசமான சம்பவம்


கனடா-புதன்கிழமை அதிகாலை மிசிசாகாவில் இடம்பெற்ற   வாகன மோதலில் இருந்து வாகனத்தின் சாரதி உயிருடன் பிழைத்த அதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மிசிசாகாவில் வெயவின்ட் டிரைவ் மற்றும் பிரிஸ்ரல் வீதி பகுதியில் அதிகாலை 1.30மணியளவில் விபத்து நடந்துள்ளது. வாகனத்தின் சாரதி மரமொன்றுடன் காரை மோதியதால் வாகனம் தீப்பற்றி சிதறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்த போது வாகனம் பூராகவும் தீ பிடித்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று அதிகாரிகள் நொருங்கிய வாகனத்திற்குள் இருந்து சாரதியை வெளியே எடுத்து விட்டனர். உயிராபத்தற்ற காயங்களுடன் வைத்தியசாலைக்கு சாரதி கொண்டு செல்லப்பட்டார்.  வேகம் நிச்சயமான ஒரு காரணியாக இருக்கும் என பொலிசார் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top