Canada

தொடர் கொலைகாரனின் பட்டியலில் மற்றுமொருவர்?

ரொறொன்ரோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தொடர் கொலை காரன் புறூஸ் மக்ஆதரின் கொலை பட்டியலில் மற்றுமொருவர் இடம்பெறுவதாக ரொறொன்ரோ பொலிசார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர். கொலையாளியால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காண முடியாத ஒருவரின் படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற செய்தி கருத்தரங்கில் முன்னணி புலனாய்வாளரான துப்பறியும் சார்ஜன் ஹாங் இட்சிங்கா ஏழாவதாக ஒருவரின் எச்சங்களை ரொறொன்ரோ மத்திய பகுதி ஒன்றில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொலையாளி மக்ஆதர் நிலசீரமைப்பாளராக பணிபுரிந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

53-மலொறி கிரசென்ட் உடமை தேடுதலிற்கு உட்படுத்தப்பட்டு குறைந்தது ஆறு உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளில் மூன்று அடையாளம் காணப்பட்டது. சொரொஷ் மஹ்முடி, 50,அன்ட்ரூ கின்ஸ்மன்,48 மற்றும் ஸ்கந்தராஜா நவரட்னம், 40. ஏழாவதாக பலியானவரின் படத்தை தாங்கள் வெளியிட விரும்பவில்லை அடையாளம் கண்டு பிடிக்க உதவும் என்ற கடைசி முயற்சியாக வெளியிடுவதாகவும் அதிகாரி தெரிவித்தார். படத்தில் முகத்தை பார்த்து உறவினர் எவராவது அடையாளம் காணலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top