News

நடுக்கடலில் கொழுந்து விட்டெரிந்த கப்பல்: 4 மாலுமிகள் மாயம் .

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர் இதில் மாயமாகியுள்ளதாகவும் எஞ்சியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கப்பலில் நேற்றைய தினம் தீவிபத்து ஏறபட்டதாகவும், தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் வீணானதாகவும் குறித்த கப்பல் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், கப்பலை மீட்பது கடினம் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து சுமார் 650 கடல் மைல்கள் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாயமான மாலுமிகள் நாலவரில் ஒருவர் இந்தியர் எனவும், எஞ்சியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கப்பல் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்ட சரக்கு பெட்டகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தே மொத்த கப்பலுக்கும் வியாபித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆபத்து விளைவிக்கும் பொருட்களுடன் குறித்த கப்பல் புறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மேலதிக தகவல்களை தெரிவிக்க நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட மாலுமிகளுக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான கப்பலில் 13 பேர் இந்தியர்கள் எனவும் பிலிப்பைன்ஸ்(9), தாய்லாந்து(2), ரோமானியா, பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 23 மாலுமிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது சுற்றுவட்டாரத்தில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர்கள் எந்த பதிலும் தரவில்லை எனவும் விபத்துக்குள்ளான கப்பல் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top