News

நடுரோட்டில் 50 பயணிகளுடன் பற்றி எரிந்த பேருந்து:

பயணிகள் பேருந்து ஒன்று நடுரோட்டில் தீடீரென்று பற்றி எரியும் காட்சி தொடர்பான விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென்று நடு ரோட்டில் நின்றது. நின்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென்று தீப்பிடிக்க ஆரம்பித்தது.

முதலில் சிறிய அளவில் எரிய ஆரம்பித்த இந்த தீ, அதன் பின் மள மளவென எரியத் துவங்கியது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த சுமார் 50 பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலறி அடித்து பேருந்தின் உள்ளே இருந்து வெளியே ஓடி வந்தனர்.

அப்போது சில பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். இதனால் பயணிகள் சிலர் அந்த இடத்திலே விழுந்தனர். ஆனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

பேருந்து பற்றி எரிவதை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைக்கும் கருவியை கொண்டு வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top