நண்பனுக்காக காத்திருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம்!

கனடா அல்பெர்டா மாகாணத்தில் உள்ள விடுதியறை ஒன்றில் நண்பனுக்காக காத்திருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்பெர்டா மாகாணத்தில் உள்ள சினுக் ஸ்டேஷன் பகுதியில் பெஸ்ட் வலியு இன் (Best Value Inn ) என்ற பிரபல விடுதி ஒன்று இயங்கி வருகிறது.
சமூகவலைதளம் மூலம் நபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அந்த நபரை சந்திப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் குறித்த விடுதி அறையொன்றில் தங்கியுள்ளார். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த மர்ம நபர் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.\
இவ் விடயம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜதிந்தர் பால் சிங் ப்ரார் (27) என்ற குறித்த சந்தேகநபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.