நியு யோர்க் ‘Hollywood North’ ஆக ரொறொன்ரோ?

ரொறொன்ரோவின் அந்தஸ்த்தை ‘Hollywood North’ தரத்திற்கு கொண்டுவருவதற்கான முக்கிய படியான கட்டுமான பணியை ஆரம்பிக்கின்றதென ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி மற்றும் ரொறொன்ரோ துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி இருவரும் வெள்ளிக்கிழமை காலை அறிவிக்க உள்ளனர்.
இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் கிப்லிங் அவெனியுவில் அமைந்திருக்கும் சினிஸ்பேஸ் திரைப்பட ஸ்ரூடியோவில் இடம்பெறுகின்றது. இந்த அறிவிப்பு குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.