News

பணத்திற்காக 650 பேரை கொன்று அமிலத்தில் கரைத்த மனிதன் .

மெக்சிகோவில் ஆள் கடத்தல் முதல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் வரை நிகழ்த்தும் கும்பல் ஒன்றிற்காக பணத்துக்காக கொலை செய்யும் ஒருவன் சுமார் 650 பேர் வரைக் கொலை செய்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த Santiago Meza Lopez, Sinaloa Drug Cartel என்னும் சட்ட விரோத கும்பலுக்காக கொலை செய்பவன். அவன் இதுவரை சுமார் 650 பேர் வரைக் கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

அவன் கொலை செய்தவர்களை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை அமிலத்தில் கரைத்து விடுவது வழக்கம்.

Tijuana என்னுமிடத்தில் ஆய்வு நடத்தியபோது 16,500 லிட்டர்கள் வேதிப்பொருட்களும் 170 முதல் 200 கிலோ மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.

உடல்களைக் கரைக்கும் வேலைக்காக ஒரு வாரத்திற்கு தனக்கு 440 பவுண்டுகள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதாக Lopez தெரிவித்தான். 2009 ஆம் ஆண்டு பொலிசார் Lopezஐக் கைது செய்தும் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top