Canada

பாடசாலைக்கு அருகில் வாகனம் மோதி11-வயது பையன் பலி ?

ரொறொன்ரோ- ஸ்காபுரோவில் மிலிக்கன் பகுதியில் 11-வயது பையன் ஒருவன் வாகனமொன்றினால் மோதப்பட்டு உயிரிழந்தான். இச்சம்பவம் கென்னடி வீதி மற்றம் Steels அவெனியு அருகில் கனொன்கேட் டிரெயில் மற்றும் புசெல் சஸ்காக்க குறுக்கு சந்திப்பில் செவ்வாய்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் நடந்துள்ளது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட பையன் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் இறந்து விட்டான். விபத்திற்கு காரணமான வாகன சாரதி சம்பவ இடத்தில் நின்று விட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த வருடம் பாடசாலைக்கு அருகில் இரண்டாவது பிள்ளை வாகனம் மோதி கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும் எனவும் பொலிசார் தெரிவித்தனர். சிறுவன் எந்த பக்கம் வீதியை கடக்க முயன்றான் என்பது தெரிய வரவில்லை.

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஒவ்வொருவரும் அவதானமாக இருப்பது மிக அவசியம் என அதிகாரி தெரிவித்தார். medium;”>விபத்து நடந்த பகுதியில் கென்னடி பொது பாடசாலை மற்றும் மேரி வாட் கத்தோலிக்க இரண்டாம் நிலை பாடசாலை இரண்டும் உள்ளன. இது ஒரு துயர் நிறைந்த சம்பவமாகும்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top