பிக்கரிங்கில் தீக்கிரையான வீட்டிற்குள் அகப்பட்ட பெண்?

ரொறொன்ரோ-பிக்கரிங் பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனால் வீட்டிற்குள் இருந்த 60-வயது பெண்ணிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை அதிகாலை இந்ந சம்வம் பிக்கரிங் வீடொன்றில் நடந்துள்ளது.
அதிகாலை 5.30-மணியளவில் எக்கோ பொயின்ட் கோர்ட்-டிக்சி மற்றும் கிளென்னா வீதி அருகில்-நடந்துள்ளது. விபத்தில் மூன்று வீடுகள் சிக்கியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். பல வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.அவர்கள் வந்த சமயம் இரண்டு வீடுகள் மோசமாக தீப்பிடித்திருந்ததாக கூறினர்.
தீ ஆரம்பித்த வீட்டிற்குள் வசிப்பவர் ஒருவர் இருந்துள்ளதாகவும் இது வரை அவரை கண்டறிய முடியவில்லை என பிக்கரிங் தலைமை தீயணைப்பு அதிகாரி ஜோன் ஹாக் தெரிவித்துள்ளார். தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.