பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு இடையில் முக்கிய சந்திப்பு.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் முக்கித்துவம் மிக்க சந்திப்பு நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்திலேயே நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்படிப்பதற்கு கூட்டமைப்பின் ஆதரவை பிரதமர் கோரியுள்ளார் என்று அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 வாக்குகளே இறுதிக்கட்டத்தில் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் எனக் கருதப்படுகின்றது.