பிரித்தானியாவில் சுரங்க ரயிலில் வெடிகுண்டு வைத்த ஈராக் அகதிக்கு சிறை .

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரித்தானியாவில் சுரங்க ரயிலில் ‘Mother of Satan’ என்று பெயரிடப்பட்ட வெடிகுண்டை வைத்த Ahmed Hassan (18) என்னும் ஈராக்கிய அகதிக்கு 93 பேரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Parsons Green Tube Station சுரங்க ரயில் நிலையத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15ம் திகதி வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் காயமடைந்தனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்த வெடிகுண்டு, முழுவதுமாக வெடிக்காததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் 18 வயதான Ahmed Hassan என்பவரை கைது செய்தனர். விசாரணையில், பிரித்தானிய தம்பதியரால் தத்து எடுக்கப்பட்ட ஈரானை சேர்ந்த அகதி யூடியூப் வீடியோக்களைப் பார்த்து எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்று கற்றுக்கொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று அவன் 93 பேரைக் கொலை செய்ய முயன்ற குற்றத்தை உறுதி செய்தது. அவனுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது, அடுத்தவாரம் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.