News

பிரித்தானியாவில் 5 பேரை பலி கொண்ட பயங்கர வெடிவிபத்து: 3 பேர் கைது

பிரித்தானியாவில் 5 பேரை பலி கொண்ட பயங்கர வெடிவிபத்தின் காரணமாக மூன்று பேரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Leicester பகுதியில் அமைந்துள்ள Hinckley சாலையில் இருக்கும் கடை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தின் காரணமாக கடை மற்றும் அருகில் இருந்த கட்டிடம் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த வெடிவிபத்தின் காரணமாக 5 பேர் பலியாகியுள்ளதாகவும் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் காரணமாக பொலிசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று பேரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் அதில் ஒருவர் East Anglia எனவும் இரண்டாவது நபர் நாட்டின் வட மேற்கு பகுதியைச் சேர்ந்தவன் எனவும் மூன்றாவது நபர் East Midlands என தெரிவித்துள்ள பொலிசார் மற்ற தகவல்களை தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த சம்பவத்திற்கும் தீவிரவாத கும்பலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருப்பது போல் ஆதாரம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top